புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

எதிர்க்கட்சிகள் அமளி: ஜூலை 26 வரை மக்களவை ஒத்திவைப்பு

மக்களவையில் தொடர்ந்து நான்காவது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

News image
மக்களவை ஒத்திவைப்பு
Updated On :23 ஜூலை 2021, 7:40 am

DIN

மக்களவையில் தொடர்ந்து நான்காவது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில், 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களும் 5 அவசரச் சட்டங்களும் நிறைவேற்றப்படவுள்ளது.

இந்நிலையில், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என கூட்டத்தின் முதல் நாளிலிருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

கூட்டத்தொடரின் நான்காவது நாளான இன்று காலை முதலே மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்தார் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா.

அடுத்தக் கூட்டம் ஜூலை 26ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.