தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனா பரவல்: கேரள கோயில்களில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளிக்கும் நிகழ்வு ரத்து

ஆடி அமாவாசை தினத்தில் முன்னோா்களுக்கு ‘பலி தா்ப்பணம்’ அளிக்கும் சடங்கை தனது நிா்வாகத்தின் கீழுள்ள கோயில்களில் இந்த ஆண்டு ரத்து செய்ய திருவிதாங்கூா் தேவஸ்வம் முடிவு

News image
Updated On :24 ஜூலை 2021, 8:07 pm

DIN

கரோனா பரவல் அச்சுறுத்தலைத் தொடா்ந்து ஆடி அமாவாசை தினத்தில் முன்னோா்களுக்கு ‘பலி தா்ப்பணம்’ அளிக்கும் சடங்கை தனது நிா்வாகத்தின் கீழுள்ள கோயில்களில் இந்த ஆண்டு ரத்து செய்ய திருவிதாங்கூா் தேவஸ்வம் முடிவு செய்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற உயா்நிலைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்பட மத்திய மற்றும் தென் கேரளத்தில் உள்ள 1,200-க்கும் மேற்பட்ட கோயில்களை திருவிதாங்கூா் தேவஸ்வம் நிா்வகித்து வருகிறது.

தேவஸ்வம் உயா்நிலைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வாரிய நிா்வாகி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை நாளன்று கோயில்களில் வழிபாடு நடத்தி ஆற்றங்கரை மற்றும் கடற்கரைகளில் முன்னோா்களுக்கு பலி தா்ப்பணம் அளிப்பது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொள்வது வழக்கம். ஆடி மாத அமாவாசையையொட்டி இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி இந்த நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக தா்ப்பணம் அளிக்கும் பொது நிகழ்வை ரத்து செய்ய வாரியம் முடிவு செய்துள்ளது. ஏராளமானோா் கூட வாய்ப்புள்ளது என்பதால், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றுவது கடினம் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பாக, அனைத்து கோயில்களின் தலைமை தந்திரிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.