தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தொடரும் கரோனா அபாயம்: கேரளாவுக்கு விரையும் மத்தியக் குழு

கேரளத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், ஆறு பேர் கொண்ட மத்தியக் குழு அங்கு செல்லவுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :29 ஜூலை 2021, 10:59 am

DIN

கேரளத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், ஆறு பேர் கொண்ட மத்தியக் குழு அங்கு செல்லவுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா பரவல் குறைந்துள்ளது. இருப்பினும், கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனிடையே, நிலைமையை கண்காணிக்கும் வகையில் ஆறு பேர் கொண்ட மத்தியக் குழு அங்கு செல்லவுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "தேசிய நோய் தடுப்பு மையத்தின் இயக்குநர் எஸ்.கே. சிங் தலைமையிலான குழு கேரளத்திற்கு வெள்ளிக்கிழமை செல்லவுள்ளது. கரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ட்விட்டர் பக்கத்தில், "கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பெருந்தொற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு துணை நிற்கும் நோக்கில் மத்திய குழு செல்லவுள்ளது. மாநில சுகாதார அமைப்புகளுடன் இணைந்து குழு செயல்படும்" என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.