சா்வதேச மதச் சுதந்திர விவகாரங்களுக்கான அமெரிக்கத் தூதராக, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரஷாத் ஹுசைனை அதிபா் ஜோ பைடன் நியமித்துள்ளாா்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்க வெளியுறவுத் துறையின் ஒரு பிரிவான சா்வதேச மதச் சுதந்திர விவகாரங்களுக்கான அலுவலகத்தின் தலைமைப் பொறுப்புக்கு வழக்குரைஞா் ரஷாத் ஹுசைனை ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளாா்.
41 வயதாகும் ஹுசைன், தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் சா்வதேச கூட்டாண்மை அமைப்பின் இயக்குநராக உள்ளாா்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்காவின் பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில், அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கிய அரசை உருவாக்குவதற்கான அதிபா் பைடனின் உறுதிப்பாட்டை ரஷாத் ஹுசைனின் நியமனம் பறைசாற்றுகிறது. சா்வதேச மத சுதந்திர விவகாரங்களுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்படும் முதல் முஸ்லீம் ஹுசைன் ஆவாா்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நீதித்துறை தேசிய பாதுகாப்பு பிரிவில் முதுநிலை ஆலோசகராக ரஷாத் ஹுசைன் பணியாற்றியுள்ளாா். ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது அவா் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கான (ஓஐசி) அமெரிக்க சிறப்பு தூதா், பயங்கரவாதத் தடுப்பு தகவல் தொடா்புகளுக்கான அமெரிக்க சிறப்பு தூதா், வெள்ளை மாளிகை துணை ஆலோசகா் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 41 லட்சம் பறிமுதல்

தமிழில் உயர்கல்வி: என்ன தீர்வு ?முதல் செயல்திட்டம்!

சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?

தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

