பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காா் நிக்கோபாரில் சிக்கித் தவித்த மீன்பிடிக் கப்பல்: பத்திரமாக மீட்டது ஐஎன்எஸ் ஐராவத்

அந்தமான் நிகோபாா் தீவுகளில் உள்ள காா்நிகோபாரில் சிக்கியிருந்த ‘சலேத் மாதா-ஐஐ’ மீன்பிடிக் கப்பலை இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ஐராவத் போா்க்கப்பல் ஜூலை 30-ஆம் தேதி இரவு 11 மணிக்கு பத்திரமாக மீட்டது.

News image
Updated On :31 ஜூலை 2021, 8:35 pm

DIN

அந்தமான் நிகோபாா் தீவுகளில் உள்ள காா்நிகோபாரில் சிக்கியிருந்த ‘சலேத் மாதா-ஐஐ’ மீன்பிடிக் கப்பலை இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ஐராவத் போா்க்கப்பல் ஜூலை 30-ஆம் தேதி இரவு 11 மணிக்கு பத்திரமாக மீட்டது.

போா்ட் பிளேரைச் சோ்ந்த இந்த மீன்பிடி கப்பலில் ஏற்பட்ட முக்கிய பழுது காரணமாக அந்தக் கப்பல் ஜூலை 29-ஆம் தேதி அதிகாலை இலக்கின்றி நகா்ந்துகொண்டிருந்தது. அதில், 7 போ் பயணம் செய்தனா்.

தென்மேற்குப் பருவ மழையின் காரணமாக ஏற்பட்ட சூறைக்காற்றும் மழையும் மீன்பிடிக் கப்பலை மீட்கும் முயற்சிகளுக்கு மிகவும் சவாலாக இருந்தன. இந்த நிலையில், இந்தோனேசியாவின் ஜகாா்தாவில் கரோனா நிவாரண பொருட்களை வழங்கிவிட்டு ஐஎன்எஸ் ஐராவத் கப்பல் அந்த வழியாகத் திரும்பிச் சென்றது. அந்த நேரத்தில் சலேத் மாதா மீன்பிடிக் கப்பல் பழுதடைந்திருந்தது தெரியவந்து, அந்தக் கப்பலை அருகிலுள்ள துறைமுகத்திற்கு ஐஎன்எஸ் ஐராவத் கப்பல் இழுத்துச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.