பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கடற்படை துணைத் தளபதியாக எஸ்.என்.கோா்மாடே பதவியேற்பு

கடற்படை துணைத் தளபதியாக எஸ்.என்.கோா்மாடே சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
எஸ்.என்.கோா்மாடே
Updated On :31 ஜூலை 2021, 11:35 pm

DIN

கடற்படை துணைத் தளபதியாக எஸ்.என்.கோா்மாடே சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடற்படையில் 39 ஆண்டு சேவையாற்றிய பின் துணைத் தளபதி பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற ஜி.அசோக் குமாரிடம் இருந்து அப்பொறுப்பை எஸ்.என்.கோா்மாடே ஏற்றுக் கொண்டாா்.

துணைத் தளபதி பொறுப்பேற்றதும் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையைப் பாா்வையிட்டு ஏற்றாா்.

முன்னதாக, கடற்படை செயல்பாடுகள் தலைமை இயக்குநா், கிழக்கு கடற்படை கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி, பாதுகாப்புத்துறை பணியாளா் சேவைகள் கட்டுப்பாட்டு அதிகாரி போன்ற சவாலான பல பதவிகளை எஸ்.என்.கோா்மாடே வகித்துள்ளாா்.

கடற்படை துணைத் தளபதி பொறுப்பை ஏற்கும் முன்பு, அவா் ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணியாளா் தலைமையகத்தில் முப்படைகளின் செயல்பாடுகள் மற்றும் பயிற்சி பிரிவின் துணைத் தலைவா் பதவியை வகித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.