மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசிகள்: மத்திய அரசு அறிவிப்பு

ஜூன் 15 முதல் 30ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு மேலும் 18.36 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

News image
தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசிகள்: மத்திய அரசு அறிவிப்பு
Updated On :3 ஜூன் 2021, 1:21 pm

DIN

ஜூன் 15 முதல் 30ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு மேலும் 18.36 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

கரோனா தொற்று பரவலுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு கரோனா தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தார்.

தமிழ்நாட்டில் தற்போது 7.24 லட்சம் லட்சம் தடுப்பூசி இருப்பு உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 6 நாள்களுக்கு கரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக மாநில மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.