தடுப்பூசி உற்பத்தி: ஹைதராபாத் நிறுவனத்திற்கு அரசு அனுமதி
30 கோடி கரோனா தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்கு ஹைதராபாத்தை சேர்ந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பையோலாஜிக்கல் -இ என்ற நிறுவனத்தின் தடுப்பூசிகளைத் தயாரிக்க ரூ.1,500 கோடியை முன்பணமாக மத்திய அரசு வழங்குகிறது.
அடுத்த சில மாதங்களில் பையோலாஜிக்கல் -இ நிறுவனத்தின் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்படும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாநில அரசுகள் துரிதப்படுத்தியுள்ளன.
அந்தவகையில் ரஷியாவில் தயாரிக்கப்பட்ட 30 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் தனி சரக்கு விமானம் மூலம்கடந்த வாரம் ஹைதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகள் அனைத்தும் 90 நிமிடங்களில் தேவைப்படும் பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...