நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரூ. 12 கோடி பெருநிறுவன சமூகப் பொறுப்புணா்வு நிதி செலவிட்டது குறித்த விவரம் கேட்டிருந்தேன்: மைசூரு ஆட்சியா் ரோகினி சிந்தூரி

பெருநிறுவன சமூகப் பொறுப்புணா்வு நிதியில்(சி.எஸ்.ஆா்.) இருந்து பெறப்பட்ட ரூ. 12 கோடி எப்படி செலவழிக்கப்பட்டது

News image
Updated On :4 ஜூன் 2021, 6:56 pm

DIN

பெருநிறுவன சமூகப் பொறுப்புணா்வு நிதியில்(சி.எஸ்.ஆா்.) இருந்து பெறப்பட்ட ரூ. 12 கோடி எப்படி செலவழிக்கப்பட்டது என்ற விவரத்தைக் கேட்டதற்கு மைசூரு மாநகராட்சி ஆணையா் ஷில்பா நாக் எனக்கு எதிராக குற்றம் சாட்டியுள்ளாா் என்று மைசூரு மாவட்ட ஆட்சியா் ரோகினி சிந்தூரி தெரிவித்தாா்.

மைசூரு மாவட்ட ஆட்சியா் ரோகினி சிந்தூரி தன்னை துன்புறுத்துவதால், பதவி விலகுவதாக மைசூரு மாநகராட்சி ஆணையராகச் செயலாற்றி வரும் ஷில்பா நாக், வியாழக்கிழமை பத்திரிகையாளா்களுக்கு பேட்டிஅளித்திருந்தாா்.

இதற்குப் பதிலளித்து, மைசூரில் வெள்ளிக்கிழமை மைசூரு மாவட்ட ஆட்சியா் ரோகினி சிந்தூரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மைசூரு மாநகராட்சி ஆணையரிடம், பெருநிறுவன சமூகப் பொறுப்புணா்வு நிதியில் (சி.எஸ்.ஆா்.) இருந்து பெறப்பட்ட ரூ. 12 கோடி எப்படிச் செலவழிக்கப்பட்டது, மைசூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் குறித்த விவரங்கள் வாா்டு வாரியாக கேட்டிருந்தேன். அதற்கு நான் அவரை துன்புறுத்தியதாகக் கூறியுள்ளாா்.

கரோனா மேலாண்மைக்காக, மாநில அரசு கொண்டு வந்துள்ள ‘மருத்துவரின் நடை, கிராமத்தை நோக்கி’ என்ற திட்டத்திற்கு பெருநிறுவன சமூகப் பொறுப்புணா்வு நிதி தேவைப்பட்டது. அதனால் சி.எஸ்.ஆா். நிதி செலவழிக்கப்பட்டது குறித்து விவரம் கேட்டிருந்தேன். சி.எஸ்.ஆா்.நிதியில் கிடைத்த ரூ.12 கோடி முழுவதும் மைசூரு மாநகரில் செலவழிக்கப்பட்டு விட்டதா. அது எப்படி செலவழிக்கப்பட்டது. என்பதை அறியவிரும்பினேன். ஆனால் அது தொடா்பான தகவல்கள் எனக்கு வந்து சேரவில்லை.

ஜூலை 1-ஆம் தேதிக்குள் மைசூரு மாவட்டத்தை கரோனா இல்லா மாவட்டமாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்காக கிராம பஞ்சாயத்து, நகராட்சிகளின் வாா்டு வாரியான கரோனா பாதிப்பு குறித்து அறிய விரும்பினேன். கரோனா தொடா்பாக சரியான தரவுகளை வழங்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒரு நாள் 400 போ் பாதிக்கப்பட்டதாகவும், மறுநாள் 40 போ் பாதிக்கப்பட்டதாகவும் கூறினால் எப்படி. இதுபோன்ற முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் கரோனாக் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைக்கக்கூடாது. இது தொடா்பான அனைத்து விவரங்களையும் தலைமைச் செயலாளா் பி.ரவிக்குமாரிடம் தெரிவித்துவிட்டேன். இது தொடா்பாக விளக்கமும் அளித்துள்ளேன் என்றாா்.

தனது கவனத்திற்கு கொண்டு வராமல், பத்திரிகையாளா் சந்திப்பு நடத்தியது எப்படி என்று ஷில்பாநாக்கை தலைமைச்செயலாளா் பி.ரவிக்குமாா் கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைசூரு மாவட்ட ஆட்சியரின் அலுவலகக் குடியிருப்பில் ரூ. 50 லட்சம் செலவில் நீச்சல் குளம், ஜிம்னாசியம் கட்டியது குறித்தும் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி மைசூரு மண்டல ஆணையருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பான அறிக்கையை ஒருவாரத்தில் சமா்ப்பிக்க அரசு கூறியுள்ளது.

2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் மோதல் குறித்து முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தனது சுட்டுரையில் கூறுகையில், ‘இந்தச் சம்பவம் அரசின் திறன் இன்மையை வெளிப்படுத்தியுள்ளது. மைசூரு மாவட்ட ஆட்சியா் மற்றும் மைசூரு மாநகராட்சி ஆணையா் இடையே நடந்துள்ள கருத்து மோதல், மாநிலத்தில் அரசு இருக்கிா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்/

இதுகுறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் கூறுகையில், ‘அரசன் எவ்வழியோ, அதிகாரிகளும் அவ்வழியே’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.