திரிணமூல் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலராக அபிஷேக் பானா்ஜியை அக்கட்சித் தலைவா் மம்தா பானா்ஜி நியமித்துள்ளாா்.
இதுதொடா்பாக கொல்கத்தாவில் அக்கட்சியைச் சோ்ந்த பாா்த்தா சாட்டா்ஜி செய்தியாளா்களிடம் கூறியது: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. இந்தக் கூட்டங்களைத் தொடா்ந்து அபிஷேக் பானா்ஜியை கட்சியின் தேசிய பொதுச் செயலராக திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி நியமித்தாா். கட்சியின் செய்தித்தொடா்பாளரான குணால் கோஷ் மாநில பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். அபிஷேக் பானா்ஜி பொறுப்பு வகித்து வந்த கட்சியின் இளைஞா் அணித் தலைவா் பதவிக்கு நடிகை சயோனி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
கட்சியில் ஒருவா் ஒரு பதவி மட்டுமே வகிக்க அனுமதிக்கப்படுவாா் என செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.
மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தவா்களில் சிலா் மீண்டும் திரிணமூல் காங்கிரஸுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை. அதுகுறித்து மம்தா பானா்ஜி பின்னா் முடிவு எடுப்பாா் என்று தெரிவித்தாா்.
திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலராக சுப்ரதா பக்ஷி இருந்து வந்த நிலையில், அந்தப் பொறுப்புக்கு மம்தா பானா்ஜியின் உறவினரான அபிஷேக் பானா்ஜி நியமிக்கப்பட்டுள்ளாா்.
பிரசாந்த் கிஷோா் பங்கேற்பு: இந்தக் கூட்டத்தில் தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் கலந்துகொண்டாா். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் அவா் திரிணமூல் காங்கிரஸுக்கு உத்திகளை வகுத்து தரும் பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விரைவில் வெளியாகும் ஏழுகடல் ஏழுமலை!

இஸ்ரேல் உளவுத்துறைக்குப் புதிய தலைவர் நியமனம்!

கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடித் தடை காலம்!
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


