தில்லிக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்
தில்லியில் பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, அண்டை மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தில்லிக்குத் திரும்பி வருகின்றனர்.


தில்லியில் பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, அண்டை மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தில்லிக்குத் திரும்பி வருகின்றனர்.
கரோனா இரண்டாவது அலை காரணமாக தில்லியில் கடந்த சில வாரங்கள் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் கடைகள், சந்தைகள் போன்றவைகளும் விதிமுறைகளுக்குட்பட்டு செயல்பட அனுமதிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. சாலை போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் தில்லியில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய அண்டை மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தில்லிக்குத் திரும்பி வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை வரவால் மெட்ரோ ரயில் நிலையங்கள், சாலைகளில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
மேலும் இன்று தில்லியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...