தில்லியில் புதிதாக 231 பேருக்கு கரோனா
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 231 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 231 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் மேலும் 231 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,29,475 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 0.5 சதவிகிதமாகப் பதிவான நிலையில் இன்று 0.36 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் 876 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 36 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 13,99,640 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 24,627 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 5,208 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...