வேளாண் போராட்டம்: மம்தாவை இன்று மாலை சந்திக்கிறார் ராகேஷ் திகைத்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் சந்தித்து பேசவுள்ளார்.


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் சந்தித்து பேசவுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் விவசாயிகள் ஆறு மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக மம்தாவை அவர் சந்திக்கவுள்ளார்.
இது தொடர்பாக ராகேஷ் திகைத் கூறியதாவது, இன்று பிற்பகல் 3 மணிக்கு முதல்வர் மம்தாவை சந்திக்கவுள்ளேன். அவருடன் விவசாயம், சுகாதாரம், கல்வி மற்றும் உள்ளூர் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பேசவுள்ளேன் என்று கூறினார்.
புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை. வேறு ஏதேனும் பிரச்னை குறித்து வேண்டுமானால் பேச்சுவார்த்தைக்கு தயாராகவுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...