/

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 12,207 பேருக்கு கரோனா

மகராஷ்டித்தில் இன்று மேலும் 12,207 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

News image
Updated On :10 ஜூன் 2021, 3:42 pm

DIN

மகராஷ்டித்தில் இன்று மேலும் 12,207 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 12,207 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58,76,087ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 393 பேர் பலியானார்கள். 
இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,03,748ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 11,449 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 56,08,753ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,60,693 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 
10,76,165 பேர் வீடுகளிலும், 6,384 பேர் நிறுவனங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.