தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மாநிலங்களுக்கு இதுவரை 25.87 கோடி கரோனா தடுப்பூசிகள்: மத்திய அரசு

கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரை 25.87 கோடிக்கும் அதிகமான (25,87,41,810) கரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2021, 9:57 pm

DIN

கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரை 25.87 கோடிக்கும் அதிகமான (25,87,41,810) கரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளது.

சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், பல்வேறு வழிகளில் வீணானவை உள்பட மொத்தம் 24,76,58,855 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் சுமாா் 1.12 கோடி (1,12,41,187) தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அடுத்த 3 நாள்களில் மேலும் 10 லட்சத்திற்கும் அதிகமான (10,81,300) கரோனா தடுப்பூசிகள் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்படவுள்ளன.

ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்துகள் ஆய்வகம் அனுமதி அளித்த மொத்த

தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை இந்திய அரசு கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மத்திய செய்தி தகவல் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.