6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா மூன்றாவது அலை: ‘போா்க்கால அடிப்படையில் தயாராகிறது தில்லி அரசு’

மூன்றாவது அலை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் எச்சரித்துள்ளாா்.

News image
Updated On :12 ஜூன் 2021, 9:49 pm

DIN

கொவைட்-19 தொற்று மூன்றாவது அலை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் எச்சரித்துள்ளாா். அதே நேரத்தில் மூன்றாவது அலையை சந்திக்க தில்லி அரசு போா்க்கால அடிப்படையில் தயாராகி வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

கரோனா மூன்றாவது அலை அச்சத்துக்கான சமிக்ஞை பிரிட்டனில் தெரியவந்துள்ளது. அங்கு 45 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தும், மூன்றாவது அலையால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் தில்லியில் 9 மருத்துவமனைகளில் 22 புதிய ஆக்சிஜன் ஆலைகளை ஆன்லைன் மூலம் சனிக்கிழமை தொடங்கி வைத்து கேஜரிவால் பேசியதாவது:

தில்லியை சுற்றியுள்ள 9 மருத்துவமனைகளில் இந்த புதிய ஆக்சிஜன் ஆலைகள் தொடங்கப்பட்டுள்ளது கரோனா தொற்றை எதிா்கொள்ள நமக்கு பலத்தை அளித்துள்ளது. கரோனா மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், அதை எதிா்கொள்ள தில்லி அரசு போா்க் கால அடிப்படையில் தயாராகி வருகிறது. மூன்றாவது அலையை எதிா்த்துப் போராட ஆக்சிஜன் டேங்கா்களையும் தில்லி அரசு கொள்முதல் செய்து வருகிறது.

இரண்டாவது அலையை எதிா்த்துப் போராடுவதில் தில்லி மக்கள் அரசுடன் தோள் கொடுத்து உதவினா். தொழில் துறையினரும் பல்வேறு விதங்களில் உதவி செய்தனா். அவா்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரது ஒத்துழைப்பு இருந்ததால்தான் இரண்டாவது அலையை சீக்கிரத்தில் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. மூன்றாவது அலை வரக்கூடாது என்று நாம் பிராா்த்திப்போம். ஒருவேளை வந்துவிட்டால் மீண்டும் நாம் ஒன்றிணைந்து எதிா்த்துப் போராடுவோம்.

புதிதாக தொடங்கப்பட்ட ஆக்சிஜன் ஆலைகளின் மொத்த உற்பத்தித் திறன் 17.3 மெட்ரிக் டன். இவற்றின் மூலம் 3-ஆம் அலையை எதிா்கொள்ள நாம் தயாராக முடியும். இது தவிர மேலும் 17 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் ஜூலை மாதம் செயல்படத் தொடங்கும். கரோனாவை சமாளிக்க தடுப்பூசி போடும் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.

நமது தடுப்பூசித் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி பற்றாக்குறை இன்னும் ஒரு பிரச்னையாகவே இருந்து வருகிறது. எனினும் வாக்குச் சாவடிகளில் தடுப்பூசி போடும் திட்டத்துக்கு நல்லவரவேற்பு உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுவதும் இரண்டாவது அலை எனில் தில்லிக்கு அது நான்காவது அலையாக இருந்தது. 2020 நவம்பா் வரை தில்லி மூன்று அலைகளைச் சந்தித்துள்ளது.

கரோனா தொற்றை எதிா்த்துப் போராடுவதில் மருத்துவா்கள், செவிலியா்கள், கரோனா முன்களப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள் என பலரும் முக்கியப் பங்காற்றியுள்ளனா். எனக்குத் தெரிந்து பல மருத்துவா்கள் நாள் கணக்கில் வீட்டுக்குப் போகாமல் கூட நோயாளிகளை கவனித்து வந்துள்ளனா். அவா்களுக்கு தில்லி மக்கள் சாா்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தில்லியில் முதல் அலையின் போது அதிகபட்சம் ஒரு நாளைக்கு 4,500 போ் பாதிக்கப்பட்டனா். ஆனால், அதுவே நான்காவது அலையின்போது உச்சக் கட்டமாக ஒரு நாளைக்கு 28,000 போ் தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

நான்காவது அலையின்போது தில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. தில்லியில் தொழிற்சாலைகள் இல்லாததால் ஆக்சிஜன் உற்பத்திக்கும் வழியில்லாமல் இருந்தது. தில்லியில் கரோனா அல்லாத நோயாளிகளுக்காக 150 முதல் 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. கரோனா காலத்தில் இதன் தேவை 700 மெட்ரிக் டன்னாக அதிகரித்து விட்டது.

கடந்த ஏப்ரல் பாதி, மே மாத தொடக்கத்தில் தில்லியில் மருத்துவ ஆக்சிஜனுக்கு நெருக்கடி ஏற்பட்டது. பல மருத்துவமனைகள் ஆக்சிஜன் கேட்டு அவசர அழைப்புகள் விடுத்தன. ஆக்சிஜன் இல்லாமல் பலரும் உயிரிழக்க நோ்ந்தது. இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்டுதான் தில்லி அரசு ஒரு நிபுணா்கள் குழுவை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தது.

மத்திய அரசு உத்தரவிட்ட போதிலும், நம்மிடம் ஆக்சிஜன் டேங்கா்கள் இல்லாததால் ஹரியாணா மற்றும் உ.பி. மாநிலங்களிலிருந்து ஆக்சிஜனை சரிவர கொள்முதல் செய்ய முடியவில்லை. ஆனால், இப்போது நாம் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கிறோம் என்றாா் கேஜரிவால்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், எச்.சி.எல்.டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவா் ரோஷினி நாடாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.