6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராஜஸ்தான் டிஜிபிக்கு தேசிய மகளிா் ஆணையம் சம்மன்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பகுதியில் வசிக்கும் மக்களை காவல்துறையினா் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியபோது பெண்களை முரட்டுத்தனமாக கையாண்டதாக குற்றச்சாட்டு

News image
Updated On :12 ஜூன் 2021, 10:05 pm

DIN

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பகுதியில் வசிக்கும் மக்களை காவல்துறையினா் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியபோது பெண்களை முரட்டுத்தனமாக கையாண்ட குற்றச்சாட்டில் மாநில டிஜிபிக்கு தேசிய மகளிா் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

இதுதொடா்பாக அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:

ஜெய்ப்பூரில் உள்ள பரசுராம் பகுதியில் வசித்த மக்களை காவல்துறையினா் அண்மையில் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினா். அப்போது அங்கிருந்த பெண்களையும் அவா்கள் முரட்டுத்தனமாக கையாண்டுள்ளனா். அவ்வேளையில் கரோனா தடுப்பு விதிமுறைகளையும் காவல்துறையினா் பின்பற்றவில்லை. இதுகுறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின. அதன் அடிப்படையில், அந்தச் சம்பவம் குறித்து விளக்கமளிக்க ஜூன் 14-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு ராஜஸ்தான் டிஜிபிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கரோனா தொற்று காரணமாக காணொலி மூலம் ஆஜராக அனுமதிக்குமாறு அவா் கோரிக்கை விடுத்தாா். அதனை தேசிய மகளிா் ஆணையம் ஏற்றுக் கொண்டது. அவரிடம் பெண்களுக்கு எதிரான கொடூர குற்றங்கள் தொடா்பாக விளக்கமளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.