தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஹாசன் விமான நிலையத்துக்கு விரைவில் அடிக்கல்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா

ஹாசன் விமான நிலையத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

News image

கோப்புப்படம்

Updated On :13 ஜூன் 2021, 10:56 am

DIN

ஹாசன் விமான நிலையத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் கூறுகையில், ஹாசன் மற்றும் சிவமோகா மாவட்டங்களுக்குச் சென்று வளர்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா சூழ்நிலை குறித்து ஆய்வு செய்தேன். முன்னாள் பிரதமர் தேவெகௌடாவும் நானும் ஹாசன் விமான நிலையத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்ட இருக்கிறோம். 
தளர்வுகளுக்குப் பின் மாநிலத்துக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள சுகாதாரத்துறையினரை அறிவுறுத்தியுள்ளேன் என்றார். 
ஹாசன், விஜயாப்புரா, கார்வாரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.