/

தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்குக் கூட கரோனா உறுதி செய்யப்படவில்லை

​ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்குக் கூட நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

News image

கோப்புப்படம்

Updated On :14 ஜூன் 2021, 3:53 pm

DIN


ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்குக் கூட நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

பிப்ரவரி 2-ம் தேதிக்குப் பிறகு ஒரு பாதிப்பு கூட பதிவாகாதது இதுவே முதன்முறை.

தாராவியில் நோய்த் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 6,861 ஆக உள்ளது. நோய்த் தொற்றுக்கு இன்னும் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 13 ஆக உள்ளது. இதில் 6 பேர் வீட்டுத் தனிமையிலும், 7 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

கடந்த ஏப்ரல் 8-ம் தேதி 99 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதே கரோனா 2-ம் அலையில் தினசரி பாதிப்பின் அதிகபட்ச எண்ணிக்கை. 

தாராவியில் கடந்தாண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் கரோனா பாதிப்பு பதிவானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.