அபாய ஒலி கேட்கிறது: மேகாலயத்தில் ஒரே மாதத்தில் கரோனாவுக்கு 13 குழந்தைகள் பலி

மேகாலய மாநிலத்தில் கரோனா பாதித்த குழந்தைகள் அதிகளவில் மரணமடைவது, அந்த மாநில அரசுக்கு மிகப் பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.
அபாய ஒலி கேட்கிறது: மேகாலயத்தில் ஒரே மாதத்தில் கரோனாவுக்கு 13 குழந்தைகள் பலி
அபாய ஒலி கேட்கிறது: மேகாலயத்தில் ஒரே மாதத்தில் கரோனாவுக்கு 13 குழந்தைகள் பலி
Updated on
1 min read


குவகாத்தி: மேகாலய மாநிலத்தில் கரோனா பாதித்த குழந்தைகள் அதிகளவில் மரணமடைவது, அந்த மாநில அரசுக்கு மிகப் பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த மாநிலத்தின் கரோனா புள்ளி விவரங்கள் கூறுவது என்னவென்றால், கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்றுக் காலம் தொடங்கியது முதல் இதுவரை 0 - 14 வயதுடைய 5,101 குழந்தைகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4,344 பேர் குணமடைந்துவிட்டனர். 17 குழந்தைகள் பலியாகிவிட்டனர். இவர்களில் 13 குழந்தைகள் கடந்த ஒரே மாதத்தில் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மே 15-ஆம் தேதி முதல் 2,950 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களில் 2,821 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், கரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்ற நிபுணர்களின் எச்சரிக்கையை மாநில அரசுகள் எந்த வகையிலும் புறந்தள்ளிவிட முடியாது என்பதற்கு சான்றாக இந்த புள்ளி விவரங்கள் அமைந்துள்ளன.

இதையடுத்து, மூன்றாவது கரோனா அலைக்கு தயாராகும் வகையில், மேகாலயத்தில் மூன்று குழந்தைகள் மருத்துவமனை அமைக்கப்படுவதாகவும், எந்தவிதமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஏஎல் ஹேக் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com