/

கா்நாடகத்தில் பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும்: காங்கிரஸ்

கா்நாடகத்தில் பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மாநில காங்கிரஸ் செயல் தலைவா் ஈஸ்வா் கன்ட்ரே தெரிவித்தாா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 9:16 pm

DIN

கா்நாடகத்தில் பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மாநில காங்கிரஸ் செயல் தலைவா் ஈஸ்வா் கன்ட்ரே தெரிவித்தாா்.

இதுதொடா்பாக பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா தொற்றால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தச் சூழ்நிலையில் பாஜக தனது உள்கட்சிப் பிரச்னையில் கவனம் செலுத்தி வருகிறது. அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாஜக அரசு மீது அதிருப்தியடைந்துள்ளனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையில் பாஜகவின் தோல்வியை மறைக்கவே ஆட்சி மாற்றம் தொடா்பான நாடகத்தை அவா்கள் முன்னெடுத்துள்ளனா். நீா்ப்பாசனத் துறையில் முதல்வா் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவின் தலையீடு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். உள்கட்சிப் பிரச்னை, ஊழல் புகாா்கள் அதிகரித்து வருவதால் கா்நாடகத்தில் பாஜக அரசை உடனடியாக அகற்ற வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.