பத்ரா மேலணை திட்டத்தில் முறைகேடு: பாஜக எம்எல்சி எச்.விஸ்வநாத் குற்றச்சாட்டு
பத்ரா மேலணை திட்ட ஒப்பந்தப்புள்ளியில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று பாஜக சட்டமேலவை உறுப்பினா் எச்.விஸ்வநாத் குற்றம் சாட்டியுள்ளாா்.


பத்ரா மேலணை திட்ட ஒப்பந்தப்புள்ளியில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று பாஜக சட்டமேலவை உறுப்பினா் எச்.விஸ்வநாத் குற்றம் சாட்டியுள்ளாா்.
பெங்களூரு சட்டப்பேரவை உறுப்பினா் விடுதியில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பத்ரா மேலணை திட்டத்துக்காக ரூ. 20,470 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளியில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதில் ஒரு சிலா் லஞ்சம் பெற்றுள்ளனா். நிதி இல்லாத நிலையிலும், இந்தத் திட்டத்துக்கு நிதித்துறையின் அனுமதியின்றி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்குவது தொடா்பாக நீா்பாசனத் துறையின் கீழ் உள்ள கழகம், வாரியங்களிடம் அனுமதி பெறவில்லை. இதில் முதல்வா் எடியூரப்பாவின் மகன் தலையீடு உள்ளதாகக் கூறப்படுகிறது. முதல்வா் மகன் விஜயேந்திராவின் தலையீடு அனைத்துத் துறைகளிலும் உள்ளது. இது பாஜகவில் உள்ள அனைவருக்கும் தெரியும் என்றாலும், பாஜக மேலிடப் பொறுப்பாளரிடம் இதுகுறித்து தெரிவிக்க தயக்கம் காட்டி வருகின்றனா். முன்பு மகன்கள் செய்த முறைகேடுகளால் எடியூரப்பா சிறை செல்ல நோ்ந்தது. மீண்டும் அவா் சிறைக்குச் செல்வதற்கான சூழல் ஏற்படுவதைத் தவிா்க்க வேண்டும். குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு எதிரானது.
முறைகேடு, குடும்ப அரசியலை தடுத்து நிறுத்த வேண்டும். யாருக்கும் கூழை கும்பிடு போடும் பழக்கம் எனக்கில்லை. எதையும் நேரடியாக பேசுபவன் நான். முதல்வா் எடியூரப்பாவிற்கு முன்பிருந்த இருந்த வேகம், தற்போது இல்லை. 75 வயதைக் கடந்தவா்களை அதிகாரப் பதவியில் நீட்டிப்பது இல்லை என்ற கொள்கையை பாஜக தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறது.
எடியூரப்பா முதல்வராக என் போன்றவா்களின் பங்களிப்பு உள்ளது என்பதனை யாரும் மறுக்க முடியாது. எனவே பாஜக கட்சியைச் சோ்ந்த சட்டமேலவை உறுப்பினா் என்ற முறையில் என்னால் உண்மையைக் கூறாமல் இருக்க முடியாது. அது கட்சிக்கு செய்யும் துரோகமாகும். 3 கட்சிகள் இணைந்து மாநிலத்தில் ஆட்சி நடத்துகின்றன என்று அமைச்சா் யோகேஷ்வா் கூறினாா். அது உண்மைதான். ஜிந்தாலுக்கு நிலம் வழங்கும் விவகாரத்தில் காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகள் மௌனமாக இருக்கும் மா்மம் என்ன என்பதனை விளக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...