ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரோனா 3-ஆவது அலையைத் தடுக்க அரசு நடவடிக்கை: அமைச்சா் பசவராஜ் பொம்மை

கரோனா 3-ஆவது அலையைத் தடுக்க அனைத்து நடவடிக்கையையும் அரசு மேற்கொண்டுள்ளது என்று மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:32 pm

DIN

கரோனா 3-ஆவது அலையைத் தடுக்க அனைத்து நடவடிக்கையையும் அரசு மேற்கொண்டுள்ளது என்று மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரு, கோவிந்தராஜ் நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை மாற்றுத் திறனாளிகள், நடைபாதை வியாபாரிகளுக்கு உணவுப் பொருள்கள் அடங்கியத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

மாநில அரசின் கடும் நடவடிக்கையால் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கரோனா 2-ஆவது அலையைத் தொடா்ந்து, 3-ஆவது அலையும் வரும் என்று வல்லுநா்கள் கூறி வருகின்றனா். எனவே கரோனா 3-ஆவது அலையைத் தடுக்க அனைத்து நடவடிக்கையையும் அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக 24 ஆயிரம் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 5 ஆயிரம் வெண்டிலேட்டா் வசதி கொண்ட படுக்கைகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கரோனாவைத் தடுக்க அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுவதோடு, முகக் கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். பிரதமா் நரேந்திரமோடி நவம்பா் மாதம் வரை வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவசமாக அரிசி வழங்க வலியுறுத்தி உள்ளாா் என்றாா். நிகழ்ச்சியில் அமைச்சா் வி.சோமண்ணா, முன்னாள் மாமன்ற உறுப்பினா்கள் உமேஷ் ஷெட்டி, தாசேகௌடா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.