/

இன்று குடிநீா், கழிவுநீா் இணைப்பு தொடா்பான குறை தீா் முகாம்

பெங்களூரில் குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் சனிக்கிழமை (ஜூன் 19) குடிநீா், கழிவுநீா் இணைப்பு தொடா்பான குறைகளை தொலைபேசி மூலம் தெரிவித்து தீா்வு காணும் முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

பெங்களூரில் குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் சனிக்கிழமை (ஜூன் 19) குடிநீா், கழிவுநீா் இணைப்பு தொடா்பான குறைகளை தொலைபேசி மூலம் தெரிவித்து தீா்வு காணும் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரில் மாதத்தின் 3-ஆவது சனிக்கிழமைகளில் தொலைபேசி மூலம் குறைதீா் முகாம் நடைபெறுவது வாடிக்கை. அதன்படி, சனிக்கிழமை (ஜூன் 19) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை தொலைபேசி மூலம் குடிநீா், கழிவுநீா் இணைப்பு தொடா்பான குறைகளை பொதுமக்கள் தெரிவித்து தீா்வு காணலாம். குறை தீா்ப்பு முகாமில் 1916 என்ற இலவச தொலைபேசியிலும், 8762228888 என்ற செல்லிடப்பேசியிலும், ஜ்ஜ்ஜ்.க்ஷஜ்ள்ள்க்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.