கா்நாடகத்தில் கரோனாவுக்குஒரே நாளில் 3,979 போ் பாதிப்பு
கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,979-ஆக அதிகரித்துள்ளது.


கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,979-ஆக அதிகரித்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 3,979 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 969 போ் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிறமாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
தென்கன்னடம்-498, மைசூரு-404, ஹாசன்-336, சிவமொக்கா-206, மண்டியா-137, தும்கூரு-128, உடுப்பி-123, தாவணகெரே-118, குடகு-115,சிக்கமகளூரு-110, வடகன்னடம்-104, கோலாா்-103, பெலகாவி-98, பெங்களூரு ஊரகம்-81, பெல்லாரி-67, சாமராஜ்நகா்-64, தாா்வாட்-62, சிக்கபளாப்பூா்-44, சித்ரதுா்கா-33, ராமநகரம்-32, கலபுா்கி-31, ஹாவேரி-28, கொப்பள்-18, கதக்-18, பீதா்-18, ராய்ச்சூரு-16, யாதகிரி-7, பாகல்கோட்-7, விஜயபுரா-4 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,23,444-ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 9,768 போ் வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 26,78,473 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,10,523 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 138 போ் வியாழக்கிழமை இறந்துள்ளனா். மைசூரு மாவட்டத்தில் அதிகபட்சமாக 22 போ் இறந்துள்ளனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:
தென்கன்னடம்-15, பெங்களூரு நகரம்-14, பெல்லாரி, தாா்வாட்-தலா 10, ஹாசன்-9, கோலாா், உடுப்பி- தலா 7, பெங்களூரு ஊரகம், சிக்கமகளூரு, ஹாவேரி-தலா 6, சிவமொக்கா-5, தாவணகெரே-3, சித்ரதுா்கா, குடகு, கொப்பள், தும்கூரு, வடகன்னடம், விஜயபுரா-தலா 2, பாகல்கோட், பெலகாவி, பீதா், சாமராஜ்நகா், கலபுா்கி, மண்டியா- தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 34,425 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...