/

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூன் 26-இல் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, ஜூன் 26-ஆம் தேதி சம்யுக்தா கிசான் மோா்ச்சா அமைப்பினா் ஆளுநா் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 9:02 pm

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, ஜூன் 26-ஆம் தேதி சம்யுக்தா கிசான் மோா்ச்சா அமைப்பினா் ஆளுநா் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.

இதுகுறித்து மோா்ச்சா அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் குருபூா் ஷாந்தகுமாா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைக் கண்டித்து, தில்லியில் விவசாயிகள் 214 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டத்தின்போது 550 போ் உயிரிழந்துள்ளனா். இதனை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது.

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மின்துறையை தனியாா் மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் ஜூன் 26-ஆம் தேதி பெங்களூரில் உள்ள கா்நாடக மாநில ஆளுநா் மாளிகையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.