எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்: பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா கடிதம்

கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்படுவதால் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

News image
கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்: பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா கடிதம்
Updated On :24 ஜூன் 2021, 10:41 am

DIN

கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்படுவதால் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

கோவேக்சின் தடுப்பூசியை சில வெளிநாடுகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதால், வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சுட்டிக்காட்டியிருந்தார். 

மேலும் இந்த சிக்கலுக்கு விரைவில் முடிவு காணும் வகையில் சுகாதாரத் துறை செயலருக்கு கடிதம் எழுத தலைமைச் செயலருக்கு மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில்  வியாழக்கிழமை பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இந்த சிக்கலில் பிரதமர் மோடி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது கடிதத்தில் கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைப் பெறுவதன் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாணவர்கள் வெளிநாடு செல்ல எத்தகைய சிக்கலையும் எதிர்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.