நாட்டில் 50 பேருக்கு ‘டெல்டா பிளஸ்’ கரோனா: மத்திய அரசு

நாடு முழுவதும் 50 பேருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் 50 பேருக்கு ‘டெல்டா பிளஸ்’ கரோனா: மத்திய அரசு
Updated on
1 min read

நாடு முழுவதும் 50 பேருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

உருமாறிய கரோனா வைரஸ் வகைகளில் ஒன்றான 'டெல்டா பிளஸ்' வகை கரோனா வைரஸால் இந்தியாவில் மகாராஷ்டிரம், கேரளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது,

நாடு முழுவதும் 45,000 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 50 பேர் உருமாறிய டெல்டா பிளஸ் கரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 20 பேர், தமிழகத்தில் 9 பேர், மத்தியப் பிரதேசத்தில் 7 பேர், கேரளத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்,பஞ்சாப், குஜராத்தில் தலா 2 பேருக்கும், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகம், ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒருவருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com