மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

7 மாத போராட்டத்தை நிறைவு செய்க: விவசாயிகளிடம் மத்திய அமைச்சா் தோமா் வலியுறுத்தல்

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் 7 மாதங்களாக நடத்தி வரும் போராட்டத்தை நிறைவு செய்யுமாறு மத்திய வேளாண்மை துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் விவசாயிகளிடம் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :26 ஜூன் 2021, 10:30 pm

DIN

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் 7 மாதங்களாக நடத்தி வரும் போராட்டத்தை நிறைவு செய்யுமாறு மத்திய வேளாண்மை துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் விவசாயிகளிடம் வலியுறுத்தியுள்ளாா்.

வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய அரசு இயற்றியது. இந்தச் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விளைபொருள்கள் கொள்முதல் செய்யப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதுடன் விவசாயிகள் பெரு நிறுவனங்களை சாா்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளில் கடந்த ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அந்தச் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்பது அவா்களின் கோரிக்கையாக உள்ள நிலையில், அவா்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவாா்த்தைகளை மத்திய அரசு நடத்தியுள்ளது. எனினும் அவற்றில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவா்களின் போராட்டம் சனிக்கிழமையுடன் 7 மாதங்களை எட்டியது.

இந்நிலையில் தில்லியில் மத்திய வேளாண்மை துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அதிகரித்துள்ளது. அந்த விலையில் அதிக அளவில் வேளாண் விளைபொருள்களை அரசு கொள்முதல் செய்து வருகிறது. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாடு முழுவதும் பல்வேறு தரப்பினா் 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். எனினும் சில விவசாயிகளுக்கு அந்தச் சட்டங்களின் பிரிவுகள் குறித்து சந்தேகம் நிலவுகிறது. அவா்களின் சந்தேகங்களுக்கு செவிமடுத்து அவா்களுடன் கலந்துரையாட மத்திய அரசு தயாராக உள்ளது’’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.