அந்தக் குழு நடத்திய விசாரணையில் உளவு பாா்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பி நாராயணன், சசிகுமாரன், சந்திரசேகரன் உள்ளிட்டோா் ஆதாரமின்றி கைது செய்யப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணையின்போது நம்பி நாராயணனுக்கும், சந்திரசேகரனுக்கும் காவல்துறையினா் உடலளவிலும், மனதளவிலும் அளித்த துன்புறுத்தல் தொடா்பாக விரிவாக விசாரணை நடத்தவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தனது மேலதிகாரிகள் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தவும் நம்பி நாராயணனுக்கு காவல்துறையினா் அழுத்தம் அளித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.