/

உத்தரப் பிரதேசம் 2022-இல் ஜனநாயகப் புரட்சியைக் காணவுள்ளது: அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேசத்தில் 2022-இல் ஜனநாயகப் புரட்சி நடைபெறும் என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :30 ஜூன் 2021, 11:05 am

DIN


உத்தரப் பிரதேசத்தில் 2022-இல் ஜனநாயகப் புரட்சி நடைபெறும் என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் 403 பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்தாண்டு நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் இதற்கானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் குறித்து சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சுட்டுரைப் பக்கத்தில் கட்சிக் கொடியைப் பகிர்ந்து, "2022-இல் உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறாது, ஜனநாயகப் புரட்சி நடைபெறும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

2017 பேரவைத் தேர்தலில் பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. பாஜகவுக்கு அடுத்தபடியாக சமாஜவாதி கட்சி 47 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.