எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம் மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

அசாமில் தேர்வின்றி தேர்ச்சி: மாணவர்கள் உற்சாகம்

அசாம் மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

News image

அசாமில் தேர்வின்றி தேர்ச்சி: மாணவர்கள் உற்சாகம்

Updated On :3 மார்ச் 2021, 12:23 pm

அசாம் மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. 

பின்னர் கரோனா தொற்று பரவல் நிலைகளுக்கேற்ப பள்ளிகள் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு சரிவர நடைபெறதா காரணத்தால் ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அசாம் மாநில பள்ளிக்கல்வித்துறை புதன்கிழமை அறிவித்தது.

மேலும் இதர வகுப்புகளுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டதற்கு மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.