உத்தரப் பிரதேசத்தில் பிலிபிட் மாவட்டத்தில் இந்திய-நேபாள எல்லையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார்.
நேபாள காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதில் பலியானவர் கோவிந்தா சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
பலியானவர் சந்தையில் இருந்து திரும்பும்போது பப்பு சிங் மற்றும் குர்மீத் சிங் ஆகிய இருவருடன் எல்லைக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் மூவரும் பிலிபிட்டின் ஹஜாரா பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இதுதொடர்பாக பிலிபிட் காவல் கண்காணிப்பாளர் ஜெய் பிரகாஷ் கூறியதாவது:
நேபாளத்திற்குச் சென்ற மூன்று இந்தியர்கள் ஒருசில விஷயங்களுக்காக நேபாள காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதில், ஒரு நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் மருத்துவமனையில் காயமடைந்துள்ளார். ஒருவர் எல்லையைத் தாண்டி தனது உயிரைக் காப்பாற்ற இந்தியாவிற்குள் நுழைந்தார், மூன்றாவது நபர் காணவில்லை.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது மற்றும் காவல்துறையினர் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
இதையடுத்து எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த படைகள் எச்சரிக்கையாக உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழியர்களுக்கான சலுகைகளைக் குறைக்கும் டெலோய்ட்! ஐவிஎஃப் சிகிச்சைக்கான நிதியையும்

கே.எல். ராகுல் 152*: தில்லி கேபிடல்ஸ் 264 ரன்கள் குவிப்பு!

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


