பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கரோனா: பஞ்சாப், மகாராஷ்டிரத்திற்கு விரைந்தது மத்தியக் குழு

மகாராஷ்டிரம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், உயர்மட்ட பொது சுகாதாரக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

News image
Updated On :6 மார்ச் 2021, 10:31 am

DIN

மகாராஷ்டிரம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், உயர்மட்ட பொது சுகாதாரக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

மத்திய சுகாதாரக் குழுவினர் மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து கரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

மகாராஷ்டிராவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள மத்தியக் குழுவை பேரிடர் மேலாண்மையின் பி.ரவீந்திரன் தலைமையேற்று வழிநடத்துகிறார்.

இதேபோன்று பஞ்சாபில் தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குநர் எஸ்.கே.சிங் வழிநடத்துகிறார்.

இந்த குழு கரோனா அதிகம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து தொற்று கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.