எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

கரோனா: தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 85.91% புதிய பாதிப்பு

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 85.91% கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 

News image
Updated On :11 மார்ச் 2021, 11:57 am

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 85.91% கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், தமிழகம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் கரோனா
தொற்றின் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகமாக பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளில் 85.91 சதவீதம் இந்த மாநிலங்களில் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 22,854 புதிய
பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. 
அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 13,659 நபர்களும் (அன்றாட புதிய பாதிப்புகளில் சுமார் 60%), கேரளத்தில் 2,475 பேரும், பஞ்சாபில் 1,393 பேரும், புதிதாக
தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் 671 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 
நாட்டில் தற்போது கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,89,226 ஆகப் பதிவாகியுள்ளது. இது நாட்டின் ஒட்டு மொத்த பாதிப்பில் 1.68
சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் கரோனா காரணமாக 126 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.