ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

கேரள பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

​கேரள பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 86 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

News image
கோப்புப்படம்
Updated On :14 மார்ச் 2021, 12:49 pm

DIN


கேரள பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 86 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி புதுப்பள்ளி தொகுதியிலும், ரமேஷ் சென்னிதலா ஹரிபத் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு கேரள காங்கிரஸ் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், "இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என முழு நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் இன்று அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியல் தலைமுறை மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. இதுமாதிரியான பட்டியலையே ராகுல் காந்தி விரும்பினார். வேட்பாளர்கள் பட்டியலில் புதிய முகங்கள் இடம்பெற வேண்டும் என அவர் விரும்பினார்" என்றார்.

140 தொகுதிகள் கொண்ட கேரள பேரவைக்கு ஏப்ரல் 6-இல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 2 வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.