தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பலி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் திலிப் காந்தி புதன்கிழமை பலியானார்.

News image

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பலி

Updated On :17 மார்ச் 2021, 10:54 am

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் திலிப் காந்தி புதன்கிழமை பலியானார்.

நாடு முழுவதும் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிய திலிப் காந்திக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதனைத் தொடர்ந்து தில்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட திலிப் காந்தி புதன்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் பலியானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.