வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பஞ்சாபில் 9 மாவட்டங்களில் இரவு நேரப் பொதுமுடக்க நேரம் நீட்டிப்பு

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர், அமிர்தசரஸ் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அதிகரித்துவரும் கரோனா பரவலால் இரவு நேர பொதுமுடக்க நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
பஞ்சாபில் 9 மாவட்டங்களில் இரவு நேரப் பொதுமுடக்க நேரம் நீட்டிப்பு
Updated On :18 மார்ச் 2021, 9:30 am

DIN

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர், அமிர்தசரஸ் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அதிகரித்துவரும் கரோனா பரவலால் இரவு நேர பொதுமுடக்க நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலால் பல்வேறு நகரங்களில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் 9 மாவட்டங்களில் விதிக்கப்பட்டிருந்த இரவு நேரப் பொதுமுடக்கத்தின் நேரம் 9 மணியிலிருந்து 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. லூதியானா, ஜலந்தர், பாட்டியாலா, மொஹாலி, அமிர்தசரஸ், குர்தாஸ்பூர், ஹோஷியார்பூர், கபுர்தலா மற்றும் ரோபார் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இரவு 11 மணியிலிருந்து 5 மணி வரை இரவு நேர பொதுமுடக்கம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபில் இதுவரை 2 லட்சத்து 3 ஆயிரத்து 49 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.