பிகாரில் ஏப். 5 வரை மருத்துவர்களுக்கு விடுப்பு இல்லை
கரோனா நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், பிகாரில் ஏப்ரல் 5-ம் தேதி வரை மருத்துவர்களின் விடுப்புகளை ரத்து செய்து அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


கரோனா நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், பிகாரில் ஏப்ரல் 5-ம் தேதி வரை மருத்துவர்களின் விடுப்புகளை ரத்து செய்து அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. பிகாரிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இதனால் பிகாரில் ஏப்ரல் 5-ம் தேதி வரை மருத்துவர்களின் விடுமுறையை அம்மாநில சுகாதாரத் துறை ரத்து செய்துள்ளது.
பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 107 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்க்கை 406-ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை பிகாரில் 1,555 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ள நிலையில், நாடு முழுவதும் 39,726 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இது இந்த ஆண்டில் பதிவான அதிகப்படியான கரோனா பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...