தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரயில்வே உள்கட்டமைப்புகள் தனியார்மயமாக்கப்படாது; ஆனால்: பியூஷ் கோயல்

ரயில்வே உள்கட்டமைப்புகள் தனியார்மயமாக்கப்படாது, ஆனால், ரயில்வேயின் சொத்துகளை, வளர்ச்சிக்கான காரணிகளாக மாற்றும் திட்டம் உள்ளது என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

News image
ரயில்வே உள்கட்டமைப்புகள் தனியார்மயமாக்கப்படாது; ஆனால்: பியூஷ் கோயல்
Updated On :19 மார்ச் 2021, 12:49 pm

DIN


புது தில்லி: ரயில்வே உள்கட்டமைப்புகள் தனியார்மயமாக்கப்படாது, ஆனால், ரயில்வேயின் சொத்துகளை, வளர்ச்சிக்கான காரணிகளாக மாற்றும் திட்டம் உள்ளது என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பயணிகள் ரயில் போக்குவரத்தை, பொது - தனியார் கூட்டணியில் இணைந்து மேற்கொள்ளவும், அதன் மூலம் ரூ.30 ஆயிரம் கோடியை முதலீடாக ஈட்டவும் திட்டமுள்ளதாகவும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் இன்று காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பியூஷ் கோயல், ஒரு துறையை தனியார்மயமாக்கும் போது, அது முழுவதையும் நிரந்தரமாக விற்றுவிட வேண்டும், அதன்பிறகு, எந்த வகையிலும் அரசின் உரிமை இருக்காது, ஆனால், ரயில்வேயில், அதன் சொத்துக்களை, வளர்ச்சிக்கான காரணிகளகாவும், வளங்களாகவும் மாற்றும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய ரயில்வேயின் உள்கட்டமைப்பு ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என்று விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.