ஏழைகளுக்கு பாஜக ஒன்றும் செய்யவில்லை: ராகுல்
ஏழை மக்களுக்காக பாஜக அரசு எதையும் செய்யவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.


ஏழை மக்களுக்காக பாஜக அரசு எதையும் செய்யவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27 முதல் 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் தேசிய தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி அசாமில் ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அதன்படி டின்சுகியா மாவட்டத்தைத் தொடர்ந்து ஜோர்ஹாட் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது அவர் பேசியதாவது,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ரூ.900-க்கும் மேல் விற்கப்படுகிறது.
இதன் மூலம் யார் பயன்பெறுகின்றனர். நிச்சயமாக ஏழைகள் இல்லை. இந்தியாவிலுள்ள 2 - 3 பெருமுதலாளிகள் மட்டுமே லாபம் அடைகின்றனர்.
அவர்களது பெரும் தொகைகொண்ட வரிகளும், கடன்களும் அரசால் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஆனால் ஏழை மக்களுக்கு பாஜக எதையும் செய்யவில்லை என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...