ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கர்நாடகத்தில் அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 1,798 பேருக்கு பாதிப்பு

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,798 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 மார்ச் 2021, 1:11 pm

DIN

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,798 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கர்நாடகத்திலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,798 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,68,487-ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 12,828 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிதாக 1,030 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,43,208-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 12,432-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.