ஹத்ராஸ் பாலியல் சம்பவத்துக்கு ஆளான பெண்ணின் குடும்பத்தினர் நீதியைப் பெறுவதில் தொடர்ந்து பல சிரமங்களை எதிர்கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸ் பகுதியில் 19 வயது தலித் இளம்பெண், கடந்த செப்டம்பா் மாதம் 14-ஆம் தேதி 4 நபா்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அந்தப் பெண் தில்லி மருத்துவமனையில் அதே மாதம் 29-ஆம் தேதி உயிரிழந்தாா்.
இந்த வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். நால்வர் மீதும் சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து பேசிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி,
உ.பி.யில் மிகவும் சோகமான மற்றும் வெட்கக்கேடான ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் நீதியைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கிறது.
ஆனால் நீதிமன்ற விசாரணையில் வெளிவந்த புதிய உண்மைகள் அரசின் மோசமான செயல்பாடு குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன.
வழக்கில் சாட்சிகளை அச்சுறுத்துவது தொடர்பான விவகாரத்தை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, உபி அரசு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் என்று மக்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உ.பி.யில் நீதி கிடைப்பது கடினம் என்ற பொதுவான நம்பிக்கை உள்ளது. அது தவறா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


