நாடு முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு பலியானவர்களில் 88 சதவிகிதத்தினர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றி கூறியது:
"நாட்டில் கரோனா தொற்றுக்கு பலியானவர்களில் 88 சதவிகிதத்தினர் 45 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். இதனால்தான் ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த வயதுப் பிரிவில் இறப்பு விகிதம் 2.85 சதவிகிதம்.
மொத்த பாதிப்பில் 3 சதவிகிதத்தினர் மட்டுமே இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் 10 மாவட்டங்களில் மட்டுமே உள்ளனர். இதில் 9 மாவட்டங்கள் மகாராஷ்டிரம், 1 மாவட்டம் கர்நாடகம்.
இரண்டு மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. முதல் மாவட்டம் மகாராஷ்டிரம். அங்கு 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முதல் 5 மாவட்டங்கள் புணே, நாக்பூர், மும்பை, தாணே மற்றும் நாசிக்.
இரண்டாவது மாநிலம் பஞ்சாப். அங்குள்ள மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டால் அதிகளவிலான கரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது" என்றார் அவர்.
புதிய வகை கரோனா தொற்று குறித்து தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குநர் எஸ்.கே. சிங் கூறுகையில், "18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 771 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி! - பி.சண்முகம்

இந்தியா மீண்டும் மோதினால் கொல்கத்தா வரை தாக்குவோம்: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் மிரட்டல்

திருப்பத்தூா் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

ஸ்ரீபெரும்புதூா்: தவெக வேட்பாளா் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


