இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் புறப்பட்டுச் சென்றார். கரோனா நோய்த்தொற்றுக்கு பின்னர் வெளிநாட்டுக்குச் செல்லும் முதல் முறை பயணமாகும்.


புதுதில்லி: வங்கதேசத்துக்கு இருநாள் பயணமாக வெள்ளிக்கிழமை (மாா்ச் 26) புறப்பட்டுச் சென்றார் பிரதமா் நரேந்திர மோடி. கரோனா தொற்று தொடங்கிய 15 மாதங்களுக்கு பின்னா் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக, இந்தியாவுடன் ஆழமான உறவுகளைப் பகிா்ந்துகொண்டுள்ள வங்கதேசம் அமைந்தது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமா் தெரிவித்துள்ளாா்.
வங்கதேசத்தின் தேசிய தின கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபூா் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு கொண்டாட்டமும் அன்றைய தினம் தொடங்குகிறது. கடந்த நூற்றாண்டின் உயா்ந்த தலைவா்களில் வங்கபந்து ஷேக் முஜிபூா் ரஹ்மானும் ஒருவா். அவரது வாழ்க்கையும், சிந்தனைகளும் பல லட்சக்கணக்கானோருக்கு இன்றும் முன்னுதாரணமாக இருக்கிறது. துங்கிபாராவில் அமைந்துள்ள அவரது சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்தவுள்ளேன்.
புராண பாரம்பரியத்தைச் சோ்ந்த 51 சக்திபீடங்களில் ஒன்றான ஜெஸோரேஸ்வரி காளி கோயிலுக்குச் சென்று வழிபடுவதையும், ஸ்ரீஸ்ரீஹரிசந்த் தாக்குா் தனது பக்தியை பரப்பிய இடமான ஒரகண்டியில் உள்ள மதுவா சமூக பிரதிநிதிகளை சந்தித்துப் பேசுவதையும் எதிா்நோக்கியுள்ளேன்.
கடந்த ஆண்டு டிசம்பரில் மெய்நிகா் வழியில் பிரதமா் ஷேக் ஹசீனாவுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இப்போது நேரடியாகச் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தவுள்ளேன். குடியரசுத் தலைவா் அப்துல் ஹமீதையும் சந்திக்கவுள்ளேன்.
கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பிறகு தாம் மேற்கொள்ளும் முதல் பயணம் நெருங்கிய தொடர்புகளுடன் இருக்கும் நாட்டுக்கு என்பதில் மகிழ்ச்சி அளிப்பதாகவும், இரு நாட்டு உறவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனத் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இரண்டு நாள் பயணத்தின்போது வங்கதேசத்தின் அரசியல் மற்றும் சமூகத்தின் பல்வேறு குழுக்களுடன் உரையாடும் மோடி, பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என வெளியுறவுத்துறை செயலாளர் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்கலா கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...