மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பங்குனி உத்திரத் திருவிழா: அமித் ஷா, ஜெ.பி.நட்டா வாழ்த்து

தமிழகம் முழுவதுமுள்ள கோயில்களில் இன்று பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

News image
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்)
Updated On :28 மார்ச் 2021, 5:36 am

DIN

தமிழகம் முழுவதுமுள்ள கோயில்களில் இன்று பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தமிழக மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், 

'தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்! இறைவன் முருகன் அருளால் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி செழித்திட இந்த புனித நாளில் எனது அன்பான "பங்குனி உத்திரம்" திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி வேல்! வீர வேல்!' எனப் பதிவிட்டுள்ளார். 

அதேபோன்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, 'தமிழக சகோதர சகோதரிகளுக்கு புனித பண்டிகை பங்குனி உத்திரம் நன்னாளில் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இந்த திருவிழா தெய்வீக திருமணங்களின் புனித பவுர்ணமி. தமிழக மக்கள் எல்லாம் வலமும் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். வேல் வேல் வெற்றி வேல்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.