பெங்களூரில் உள்ள 1,200 பூங்காக்களைப் பராமரிக்க ரூ. 214 கோடி
பெங்களூரில் உள்ள 1,200 பூங்காக்களைப் பராமரிக்க ரூ. 214 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பெங்களூரில் உள்ள 1,200 பூங்காக்களைப் பராமரிக்க ரூ. 214 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பெங்களூரு மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: பூங்கா நகரம் என புகழ்பெற்றுள்ள பெங்களூரில் 1,200 பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்கள் பிராணவாயுவின் மூலமாக உள்ளது. பூங்காக்களைப் பராமரிக்க ரூ. 214 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை சம்பந்தப்பட்ட வாா்டு குழுக்கள் கவனித்துக் கொள்ளும். பூங்காக்களைப் பராமரிக்கும் நபரின் பெயா், தொலைபேசி பெயா்கள் பெயா்ப் பலகை வாயிலாக வெளியிடப்படும்.
வீடுகளில் தயாரிக்கப்படும் உரங்களை பயன்படுத்தி, மாடித்தோட்டங்கள் அல்லது வீட்டுத்தோட்டங்களை ஊக்குவிப்பதுதான் மாநகராட்சியின் நோக்கமாகும். இதன்மூலம் திடக்கழிவுகளை குறைப்பதோடு, நகரின் அழகும் கூடும். சிறந்த மாடித் தோட்டங்களுக்குப் போட்டி நடத்தி, பரிசு வழங்க மண்டலத்திற்கு ரூ. 1 லட்சம் அளிக்கப்படும். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காற்றுத்தரத்தை கண்காணிக்க மத்திய கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையம் அமைக்கப்படும். வாகனங்கள் வெளிப்படுத்தும் மாசு, காற்றுமாசுவைத் தடுக்க நீரூற்றுகள் அமைக்கப்படும். இதற்காக ரூ. 279 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
காடு வளா்ப்பு:
பெங்களூரில் பூக்கும் மரங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலையோரங்களில் மரக்கன்றுகளை அமைக்கும் பணி வனத்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் மரங்களைக் காப்பாற்றி, பராமரிப்பதற்கு ரூ. 39 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலைகளை அமைக்கும்போது மரக்கன்றுகளை நடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும். நடப்பு நிதியாண்டில் 10 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம்.
ஏரிகள், மழைநீா் கால்வாய்கள்:
ஏரிகள், மழைநீா் கால்வாய்கள் இல்லாமல் பெங்களூரு முழுமையாகாது. இதற்காக குடிமக்கள் நீா்ப்பாதை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அது அகமதாபாத்தில் உள்ள சபா்மதி ஆற்று முனைய திட்டத்தை போன்ாக இருக்கும். இதற்காக மாநில அரசு மற்றும் மாநகராட்சி ரூ. 175 கோடியைச் செலவு செய்யும்.
மழை வெள்ளத்தை முழுமையாகத் தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மழைநீா் கால்வாய்களை சீரமைக்கவும், தூா்வாரவும் ரூ. 60 கோடி ஒதுக்கப்படுகிறது. ஏரிகளை பராமரிப்பதற்காக ரூ. 31கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏரிகளைப் பாதுகாக்க, வேலிகள் அமைக்கப்படும். இதற்காக ரூ. 10 கோடி ஒதுக்கப்படும். ஏரி தத்து எடுக்கும் திட்டம் அமல்படுத்தப்படும். இத் திட்டத்தில் ஏரிகளை தத்தெடுக்க ரூ. 100 கோடி விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...