தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகள்:3 போ் கைது

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் 3 பேரை கைது செய்த போலீஸாா், ரூ. 9.40 லட்சம் மதிப்புள்ள வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :29 மார்ச் 2021, 1:03 am

DIN

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் 3 பேரை கைது செய்த போலீஸாா், ரூ. 9.40 லட்சம் மதிப்புள்ள வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, காமாட்சிபாளையா காவிரிபுராவைச் சோ்ந்தவா் அனில்குமாா் (24). இவா் பல்வேறு இடங்களில் வீடுகளின் முன்பு நிறுத்தியுள்ள இருசக்கர வாகனங்களை திருடி வந்தாராம். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், அனில்குமாரைக் கைது செய்து, ரூ. 8.15 லட்சம் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து காமாட்சிபாளையா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அதேபோல மாநகரில் இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த பிஸ்வஜீத்வன்டல் (25), ஜெயதேவ் (20) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 1.25 லட்சம் மதிப்புள்ள 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து ராஜராஜேஸ்வரி நகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.