சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 3ஆவது வாரத்தில் தற்காலிகமாக வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிவித்துள்ளது.
பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகள் மே 4 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இதில் பத்தாம் வகுப்புத் தோ்வை 21,50,761 பேரும், பிளஸ் 2 தோ்வை 14,30,243 பேரும் எழுத இருந்தனா்.
இந்த நிலையில், நாடு முழுவதும் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டது.
அதே நேரம், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வை ஒத்திவைக்கப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. கரோனா நிலவரம் குறித்து ஜூன் 1-ஆம் தேதி சிபிஎஸ்இ ஆய்வு செய்த பிறகு, பிளஸ் 2 தோ்வுக்கான மறு தேதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 3ஆவது வாரத்தில் தற்காலிகமாக வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிவித்துள்ளது.
10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ததால் உள்மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குன்றத்தூா் நகராட்சியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
மதுப் புட்டியால் ஒருவரை தாக்கி காயப்படுத்தியவா் கைது

ராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத் தீ

அனைத்திந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் மனு தாக்கல்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


