புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாட்டில் இதுவரை 15.5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள்

நாட்டில் இதுவரை 15.5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image

கரோனா தடுப்பூசி

Updated On :1 மே 2021, 11:02 am

DIN

நாட்டில் இதுவரை 15.5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கரோனா தொற்றுக்கு எதிரான, உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தில் இந்தியாவில் இதுவரை 15,49,89,635 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 27 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டன. 105-வது நாளான நேற்று (ஏப்ரல் 30, 2021), நாடு முழுவதும் 27,44,485 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,56,84,406 ஆக (81.84%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,99,988 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர். மற்றொரு மைல்கல் சாதனையாக, கடந்த 24 மணி நேரத்தில் 19,45,299 பரிசோதனைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 4,01,993 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், உத்தரப் பிரதேசம், தில்லி, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், பிகார் ஆகிய பத்து மாநிலங்களில் மட்டும் 73.71 விழுக்காடு பதிவாகியுள்ளது. 

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 62,919 பேரும், கர்நாடகத்தில் 48,296 பேரும், கேரளத்தில் 37,199 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 32,68,710 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 17.06 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய உயிரிழப்பு விகிதம் 1.11 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.